தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

அனைவராலும் இபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Social Security Assistant

காலியிடங்கள்: 2189

சம்பளம்: மாதம் ரூ.25,500

வயதுவரம்பு: 21.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரு நிலைகளாக நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_Recruit_SSA_109.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2019

No comments:

Post a Comment