நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு விபத்து அல்ல : கேரள சிறைத்துறை டிஜிபி தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு விபத்து அல்ல : கேரள சிறைத்துறை டிஜிபி தகவல்

துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


 கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தமக்கு இருந்த அனுபவம் குறித்த கட்டுரையில் ரிஷிராஜ் சிங், இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.


பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாகவே உள்ளதாக உமாதாதன் கூறியதாக ரிஷிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும் வெளியில் இருந்து அழுத்தம் தராமல் குளியல் தொட்டியில் உள்ள ஓரடி தண்ணீரில் ஒரு நபரின் கால்களோ அல்லது தலையோ மூழ்காது.


 ஆகவே ஸ்ரீதேவி மரணம் கொலையாக இருக்கலாம் என்பது உமாதாதன் கணிப்பு என்று தமது கட்டுரையில் கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தமிழ் மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி தனது கணவருடன் ஒரு திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment