100 நாள் வேலை திட்டத்தில் பள்ளியை சுத்தப்படுத்த உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 13, 2019

100 நாள் வேலை திட்டத்தில் பள்ளியை சுத்தப்படுத்த உத்தரவு

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பள்ளி வளாகத்தை, 100 நாள் வேலை திட்டத்தில், சுத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்


அவர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


மழைக் காலங்களில், பள்ளி வளாகங்களில் உள்ள புதர்கள் மற்றும் குப்பையால், கொசு உற்பத்தி அதிகரித்து, 'டெங்கு' உள்ளிட்ட தொற்று நோய்கள் உருவாகும்.


இதை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் இணைந்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை பயன்படுத்தி, பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்.


மாணவ - மாணவியரிடம், டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகம், வீடுகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment