73 அடி கதர் துணியில் தேச தலைவர்கள் ஓவியம்: மாணவர்கள் அசத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 13, 2019

73 அடி கதர் துணியில் தேச தலைவர்கள் ஓவியம்: மாணவர்கள் அசத்தல்

Join our Whatsapp group1
Join Our Whatsapp group 2
Join Our Whatsapp group3

மின்னல் கல்விச்செய்தி WhatsApp குரூப்பில் இணைய வேண்டுமென்றால் மேலே உள்ள link ஐ பயன் படுத்தி join ஆகவும்

நெல்லை அருங்காட்சியகத்தில் 73 அடி நீள கதர் துணியில் தலைவர்களின் படங்களை மாணவ, மாணவிகள் வரைந்து அசத்தினர். நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் (15ம் தேதி) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


இதையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 73 அடி நீளம் கொண்ட கதர் துணியில் சுதந்திர போராட்டத் தியாகிகள், தலைவர்களின் படங்களை மாணவ, மாணவிகள் 73 பேர் வரையும் நிகழ்ச்சி நடந்தது.


மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்களின் படங்களை மாணவ, மாணவிகள் தத்ரூபமாக வரைந்தனர். தலைவர்கள் படங்களின் பின்புறத்தில் தேசிய கொடி வடிவில் வர்ணங்கள் தீட்டினர்.

பின்னர் இந்த ஓவிய பதாகையை அருங்காட்சியக வளாகத்தில் பிடித்தபடி நின்று தேச ஒற்றுமை உறுதிமொழியேற்றனர்.

No comments:

Post a Comment