மத்திய அரசு பணியில் 1,351 காலி இடங்களுக்கு தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

மத்திய அரசு பணியில் 1,351 காலி இடங்களுக்கு தேர்வு

மத்திய அரசு துறைகளில் 1,351 பணியிடங்களுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள, 230 பிரிவுகளில், 1,351 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


.இதற்கான தேர்வு, கணினி வழியில் நடைபெறும். இதில், 17 பிரிவுகளை சார்ந்த, 67 பணியிடங்கள், சென்னை தென் மண்டல, மத்திய பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்தது.இந்த பணியிடங்கள் குறித்த விரிவான தகவல்களை,ssc.nic.in,sscsr.gov.in என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாள். இதற்கான தேர்வுகள், அக்., 14 முதல், 18ம் தேதி வரை நடைபெறலாம். பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment