பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வாபஸ்

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு போன்றவற்றை அணியக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.


 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு நிறங்களில் கயிறுகள், ரப்பர் வளையங்கள், உலோகத்தால் ஆன வளையங்கள் அணிந்து வருகின்றனர்.



இது மாணவர்கள் இடையே சாதி வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்று கடந்த 2018ம் ஆண்டைய பயிற்சி பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசுக்கு புகார் கடிதம் வந்தது. இதன் பேரில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாரும் கைகளில் சாதிகளை குறிக்கும் வகையிலான கயிறு மற்றும் வளையங்கள் அணிந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.


 இதையடுத்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கையில் இறங்கி, பள்ளி மாணவர்கள் கைகளில் அணிந்திருந்த கயிறுகளை வலுக்கட்டாயமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


 கடந்த இரண்டு நாட்களாக இந்த நடவடிக்கை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித்துறைக்கு கண்டனங்களை தெரிவித்தன.

இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கடந்த 31.7.19 தேதியில் வெளியான ஆர்சிஎண்: 30311/எம்./எஸ்1/2019 என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கைகளில் கயிறு அணியலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment