நன்னடத்தை சான்றிதழை தவறாக வழங்கிய மாணவனுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

நன்னடத்தை சான்றிதழை தவறாக வழங்கிய மாணவனுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நன்னடத்தை சான்றிதழை மாணவனுக்கு உள்நோக்கத்துடன் தவறாக வழங்கிய மருத்துவ கல்லூரி, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



.கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த பாலசுந்தரராஜ் என்பவர் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


 அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து, பயிற்சியை மட்டும் முடிக்க வேண்டியது இருந்தது.


 அப்போது, எனது பெற்றோர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர். இதனால், அங்கு பயிற்சியை மேற்கொள்வதற்காக சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன்.



 அதற்கு வேலூர் கிறிஸ்தவ கல்லூரி அனுமதியளித்தது. ஆனால், நான் படித்த கல்லூரி நிர்வாகம் எனக்கு சான்றிதழ்களை வழங்கவில்லை.  இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.


வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரூ.75 ஆயிரம் கட்டண பாக்கியை பெற்றுக்கொண்டு சான்றிதழ்களை வழங்க கல்லூரிக்கு உத்தரவிட்டது.

அதன்படி,  என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கியது. ஆனால், மாற்று சான்றிதழில் எனது நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று தேவையில்லாமல் குறிப்பிட்டு கொடுத்தனர்.
இதனால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது


. வேறு எங்கும் மேற்படிப்பு படிக்க முடியவில்லை. எனவே, எனக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்


.இந்த மனு, மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன், உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஸ்வரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:


 உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரர் கட்டண பாக்கியை செலுத்திவிட்டதால் கல்லூரி நிர்வாகம் முறையாக நன்னடத்தை சான்றிதழை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர்


. இதனால் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மனுதாரரின் எதிர்காலம் பாதிக்கின்ற வகையில் கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டது சட்டத்துக்கு புறம்பானது.


எனவே, மனுதாரருக்கு கல்லூரி நிர்வாகம் இழப்பீடாக ரூ.20 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment