கலை கல்லூரிகளில் மாணவர்களை புதிய பாடப்பிரிவில் இன்று முதல் சேர்க்கலாம்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

கலை கல்லூரிகளில் மாணவர்களை புதிய பாடப்பிரிவில் இன்று முதல் சேர்க்கலாம்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக தொடங்கப்பட்ட புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


 தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடதப்படும் பல்வேறு பாடப்பிரிவுகளுடன் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் கூடுதலாக 81 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.


அதன் அடிப்படையில் தமிழகத்தில் 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 69 இளநிலைப் பாடப்பிரிவுகளும், 12 முதுநிலைப் பாடப்பிரிவுகளும் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப்பிரிவுகளை 45 கல்லூரிகளில் இந்த  ஆண்டே தொடங்க உள்ளன.

கடந்த ஆண்டு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள், புதியதாக சேர விரும்புவோருக்கும் இந்த புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.


 இன்று முதல் மாணவர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
31ம் தேதிக்குள் சேர்க்கை முடிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment