அத்திவரதர் தரிசனம்; 2நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

அத்திவரதர் தரிசனம்; 2நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது

அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுத்து, 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என்று எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில், அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1ம் தேதி எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய ஹிந்து மகா சபா தலைவர் வசந்தகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


 அந்த மனுவில், ‘‘கடந்த 1703ம் ஆண்டு கோயில் நிர்வாகிகள் அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்தியபோது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்பு, 1937ம் ஆண்டு சிலை மீண்டும் எடுக்கப்பட்டு 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. 


பின்னர் 42 ஆண்டுகளுக்கு பிறகு 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது.தற்போது, ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். 


இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசம் செய்துள்ளனர். அதே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். 


அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்ற எந்த ஆகம விதியும் இல்லை. எனவே, எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில், தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்டபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது

No comments:

Post a Comment