பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28ல் இடமாறுதல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28ல் இடமாறுதல்

அரசுப் பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, 28ம் தேதி, இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது


.தமிழக பள்ளி கல்வித் துறையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், செப்டம்பரில் நடக்க உள்ளது.


அதற்கு முன், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது


.இதன்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, 28ம் தேதி, அந்தந்த மாவட்டங்களுக்குள் நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment