மாணவருக்கு அக மதிப்பீடு:ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

மாணவருக்கு அக மதிப்பீடு:ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ்1, பிளஸ் 2 மாணவருக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்த ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதலை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கை:

தொழில்கல்வி செய்முறை தவிர்த்து, இதர பாடங்களுக்கு அகமதிப்பீடாக, 10 மதிப்பெண் வழங்க வேண்டும்.


இதில் மாணவர்கள், 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு பெற்றிருப்பின் - 2 மதிப்பெண்; உள்நிலை பருவத்தேர்வுகளுக்கு - 4; களப்பணிக்கு - 2; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம் உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகளில் ஈடுபட்டால் - 2 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது


.மேலும், தொழில்கல்வி செய்முறை உள்ள பாடங்களுக்கு அகமதிப்பீடாக, 25 மதிப்பெண் அளிக்க வேண்டும்

அதில், அதிகபட்ச வருகை பதிவுக்கு - 5 மதிப்பெண்; பருவத்தேர்வுகளுக்கு - 10; களப்பணிக்கு - 5; கல்வி இணை செயல்பாடுகளுக்கு - 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.


இவ்வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் நடுநிலையுடன் அகமதிப்பீடு வழங்குவது அவசியம். மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க கட்டாயம்


. மேலும், அகமதிப்பீடு விவரங்களை தகவல் பலகை வாயிலாக மாணவருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment