தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

தேசிய கல்விக் கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கருத்து தெரிவிக்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கடைசி நாளாகும்.



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.



இதையடுத்து, அந்த வரைவு அறிக்கையின் முக்கிய பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு
www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கல்விக் கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கேட்டிருந்தநிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைகிறது.


தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் இதுவரை 1.52 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment