ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 20, 2019

ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு

ஏ..டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்.

 ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும்

கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

. மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்.,களில் கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய கட்டண முறை, அக்., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment