நீட் தேர்வு முறைகேட்டுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 20, 2019

நீட் தேர்வு முறைகேட்டுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது

நீட் தேர்வில் முறைகேடு செய்து மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் இடம் பெற்ற விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தமிழக அரசு பொறுப்பாகாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


நீட் தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்தியதால் அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தமிழக மருத்துவக் கல்வி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

அதுமட்டுமன்றி, நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவற்றுக்கு அவர் அளித்த பதில்:


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக கிடைத்த தகவலின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தியது.

இதுதொடர்பாக அவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. எனவே, இதற்கு தமிழக அரசு பொறுப்பாகாது என்றார் அவர்.

No comments:

Post a Comment