ATM ல் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 28, 2019

ATM ல் பணம் எடுக்கப் போறீங்களா? இதோ புதிய விதிமுறைகள்!

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைக் காட்டிலும் நாம் அதிகமுறை ஏடிஎம்களில்தான் பணம் எடுக்கிறோம். இந்நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன. அதேசமயம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. அனேக மக்கள் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

சிலசமயம் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம்.இல் பணம் வந்திருக்காது. ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும்

இந்தப் பணம் மீண்டும் கணக்கில் சேர்க்க சில தினங்கள் ஆகும். இவை உரிய தினத்தில் வரவு வைக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

இதையடுத்து ரிசர்வ் வங்கி சென்ற வாரம், 'வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைப்பதில் சில வங்கிகள் காலதாமதம் செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் உரிய கணக்குகளில் வரவு வைக்கப்படாத பட்சத்தில் வங்கிகள் அந்த நபருக்கு அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

இந்தப் புதிய விதிகளின்படி ஏ.டிஎ.ம்.இல் பணம் வராமல், கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பணம் மீண்டும் 5 தினங்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இல்லையெனில் பணம் திரும்பி கணக்கில் வைக்கப்படும் வரை நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் அந்தப் பயனருக்கு வங்கி செலுத்த வேண்டும். பணம் எடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே அவகாசம்.

சென்ற மாதம் ஆர்பிஐயின் அறிவிப்புப்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக்கூடாது.

 ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவே இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதனால் ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை இந்தக் கணக்கில் சேர்க்காமல், வாடிக்கையாளருக்கு அந்த இலவச பரிவர்த்தனையை வழங்க வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

அதேபோல் ஏ.டி.எம்.இல் பணம் இல்லாதபோதோ, தவறான பின் கொடுக்கப்பட்டோ, ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக் கூடாது.

உதாரணமாக எஸ்.பி.ஐ வங்கி ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இதற்கு முன்புவரை நாம் பணம் இருக்கிறதாக என ஏடிஎம்மில் பரிசோதிப்பது, பணம் எடுப்பது, பின் மாற்றுவது என அனைத்துமே இந்த இலவச பரிவர்த்தனைக் கணக்கில் கழிக்கப்பட்டுவந்தது.

புதிய விதிகளின்படி இனி பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள். பணம் அல்லாத பிற பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment: