இந்த 2 நகரங்கள் கடலில் மூழ்கும்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 30, 2019

இந்த 2 நகரங்கள் கடலில் மூழ்கும்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 2050க்குள், மும்பை மற்றும் கோல்கட்டா நகரங்களின் பெரும் பகுதிகள், தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு மையம், எச்சரிக்கை விடுத்துள்ளது.



அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த, மத்திய காலநிலை ஆய்வு மையம் என்ற அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்து, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு குறித்து, 'இயற்கை தொடர்பியல்' என்ற சுற்றுச்சூழல் இதழில், கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


'ரேடார்' கருவிஅதன் விபரம்


:புவி வெப்பமயமாதல் காரணமாக, சர்வதேச அளவில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தங்கள் 'ரேடார்' கருவி உதவியுடன், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.



அதில், 2050க்குள், மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் மேற்கு வங்கத்தின் கோல்கட்டா ஆகிய நகரங்களில், கடல் நீர்மட்டம் உயர்ந்து, பெரும்பாலான பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டது. இதில், 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என கூறப்பட்டது


.ஆனால், இந்த ஆய்வில், பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை, மிகவும் குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது.மத்திய காலநிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, 2050க்குள், கடல் நீர்மட்டம் உயர்ந்து, உலகின் பல நகரங்களை, மூழ்கடிக்கும். இதில், உலகம் முழுவதும், 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவர்.


இடமாற்றம்ஆசியாவில் மட்டும், 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர். மும்பை, நவி மும்பை மற்றும் கோல்கட்டா நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும். இதில், 3.5 கோடி பேர், பாதிப்புக்கு உள்ளாவர். வங்கதேசம் மற்றும் சீனா கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.



எனவே, பாதிப்புக்கு உள்ளாக போகும் நாடுகள், தங்கள் குடிமக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு, இப்போதே இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம். ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. எனவே தான், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment