இஸ்ரோ தலைவர் சிவன் எளிமையாக வாழ்பவர். எளிய குடும்பத்தில் பிறந்த சிவன், நாட்டின் உயர் பதவி ஒன்றில் இப்போது அமர்ந்துள்ளார்.
எந்தக் காலகட்டத்திலும், தன் எளிமையை சிவன் கைவிட்டதில்லை. இப்போதும், விமானப் பயணங்களில் சாதாரண எகனாமி கிளாஸ் வகுப்பில்தான் பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில், பெங்களூருவிலிருந்து இண்டிகோ விமானத்தில் சாதாரண வகுப்பில் சிவன் பயணித்தார்.விமானத்தில் சிவன் ஏறியதைப் பார்த்த பணிப்பெண்கள் உற்சாகமடைந்தனர்அவருடன் கைகுலுக்கி செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
அதோடு, 'இஸ்ரோ தலைவரும் விஞ்ஞானியுமான சிவன், நம்மோடு பயணிக்கப்போகிறார்' என்றும் மைக்கில் பணிப்பெண்கள் தெரிவித்தனர். அப்போது, பயணிகள் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். தற்போது, இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகிவருகிறது.
'சினிமா ஹீரோக்களைப் போற்றாதீர்கள்; நாட்டின் உண்மையான ஹீரோக்களைப் போற்றுங்கள்!'
'இப்படியோர் அப்பாவி மனிதராக இருக்கிறாரே... அந்தச் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது.
'இவரைப் போன்றவர்களைப் போற்ற மக்கள் கற்றுக் கொண்டுவிட்டார்கள். நாடு சரியான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது.'
'இளைய தலைமுறை இவரிடத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ளும்.'
- என்று ட்விட்டர்வாசிகள் சிவனுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
'அரசியல்வாதிகளே... இவரிடமிருந்து எளிமையைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரெட் லைட் பொருத்தப்பட்ட கார்கள் எதற்கு? என இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 7-ம் தேதி, இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், நிலவை எட்ட சிறிது தொலைவு இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
சந்திரயான் நிலவில் இறங்குவதைப் பார்க்க பிரதமர் மோடியும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வந்திருந்தார். சந்திரயான் திட்டம் தோல்வியடைந்ததால், தழுதழுத்த சிவனைக் கட்டியணைத்து, பிரதமர் மோடி ஆறுதல்படுத்தினார்.
இந்தக் காட்சியை, லட்சக்கணக்கான குழந்தைகள் தொலைக்காட்சிகளில் கண்டனர். இதைப் பார்த்தபிறகு, ஏராளமான குழந்தைகள் 'நானும் விஞ்ஞானி ஆவேன்' என்று சபதமெடுத்துள்ளனராம். அப்துல் கலாம் போல குழந்தைகள் மனத்தில் சிவன் இடம்பிடித்துள்ளதாக ஏராளமான பெற்றோர்கள் சொல்கின்றனர்.

No comments:
Post a Comment