வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 5, 2019

வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள்

உலகின் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முதன்மையானது வாட்ஸ்அப். இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், அண்ட்ராய்டு பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய பயனர்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ, இருக்கும் கணக்குகளை மறுபரிசீலனை செய்யவோ முடியாது என்று வட்ஸ்அப் கூறியுள்ளது.

இருப்பினும், பழைய வெர்ஷனில் இருப்பவர்கள் பிப்ரவரி 1, 2020 வரை தொடர்ந்து வட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும். “IOS 8 ல், நீங்கள் இனி புதிய கணக்குகளை உருவாக்கவோ அல்லது இருக்கும் கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ முடியாது” என்று வட்ஸப் அப்டேட் கூறுகிறது.

எனவே ஐபோன் பயனர்களுக்கு வட்ஸ்அப்பை இயக்க iOS 9 அப்டேட்டேட் வெர்சன் தேவைப்படும். எனவே, 'சிறந்த அனுபவத்திற்காக, இனி உங்கள் தொலைபேசியில் கிடைக்கும் iOS இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்,” என்று வட்ஸ்அப் கூறியுள்ளது

No comments:

Post a Comment