இதே நாளில் அன்று - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

இதே நாளில் அன்று

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றுாரில், உக்கிரபாண்டி -- இந்திராணி தம்பதிக்கு மகனாக, 1908 அக்., 30ல் பிறந்தார். அப்போதைய மதராஸ் மாகாணத்தில், குற்ற பரம்பரை சட்டம் அமலில் இருந்தது;



அதை எதிர்த்து போராடினார். 'தாழ்த்தப்பட்ட வகுப்பினர், கோவிலுக்குள் பிரவேசம் செய்யக்கூடாது' என, தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து, 1939 ஜூலை 8ல், அவர்களுடன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று வணங்கினார், தேவர். அதன் வாயிலாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு, கோவில் பிரவேச உரிமையை பெற்று தந்தார்.



அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின், தமிழக தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் இருந்தவர். மூன்று முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர். பரமக்குடியில், இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார்.


 இந்த வழக்கில், தேவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில், அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு, 1959 ஜனவரியில் விடுவிக்கப்பட்டார். 1963- அக்., 30ல் காலமானார்.அவர் பிறந்த, தினம் இன்று

No comments:

Post a Comment