அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அமெரிக்க ஆசிரியர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அமெரிக்க ஆசிரியர்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஆசிரியர்கள் 'ஆன்லைன்' வழியாக ஆங்கிலம் மற்றும் கணினி பாடம் நடத்துகின்றனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.



அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவர் அசோகன் வெளிநாட்டில் வசித்தாலும் 'நமது போதமலை' என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மரக்கன்று நடவு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


இவர் அமெரிக்காவில் உள்ள 'நமது கிராமம்; நமது பொறுப்பு' என்ற குழுவைச் சேர்ந்த கவிதா பாண்டியன் மூலம் ஆர்.புதுப்பாளையம் பள்ளிக்கு ஆங்கிலம் கணினி வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.



அமெரிக்காவில் உள்ள தன் நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை ஒன்றிணைத்து ஆர்.புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பாடம் நடத்தப்படுகிறது

.எட்டாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வழியாக திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் பகல் 11:00 மணிக்கு பாடம் துவங்குகிறது.இரண்டு வாரங்களே நடந்துள்ள இந்த வகுப்பினால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை அச்சமின்றி பேசத் துவங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment