காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 23-10-2019 - T.தென்னரசு
காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
23-10-2019
இன்றையதிருக்குறள்
குறள்எண்- 241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
 பூரியார் கண்ணும் உள.

மு.வ உரை:

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

கருணாநிதி  உரை:

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.

சாலமன் பாப்பையா உரை:


செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

நமக்கு திறன் இல்லைஎன்னும் உணர்வு நம் மனதிலிருந்து எழும் தோல்வி மனப்பான்மையாகும். தோல்வி மனப்பான்மையைத் தோல்வி அடையச் செய்து வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
மூளை செய்யாததை முழங்கால் செய்யும்
விளக்கம் :
இது பொதுவாக கிறிஸ்துவர்கள் கூறுவது. ஏனெனில் அவர்கள் முழங்கால் படியிட்டு பிராத்திக்கிறார்கள். நம்மால் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய முடியாதபோது நம்மைவிட மேலான கடவுளை வேண்டிக் கேட்கும்போது அவர் நமக்கு அந்த செயலை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பார் என்பதே இதன் அர்த்தம். நாம் கடவுளைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதை இது கூறுகிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱Important  Words

1.Ear-drum- செவிச்சவ்வு
2. Eye -brow - புருவம்
3. Elbow - முழங்கை
4. Forehead - நெற்றி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?

 விஸ்வநாதன் ஆனந்த்

2. மைனா பறவைகளின் தாயகம் எது?

 இந்தியா

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

 1. விதைக்காத விதை மண்ணிலே; அறுக்காத கதிர் விண்ணிலே. அது என்ன?
சூரியன்
2.  தண்டு மேலே தாழி, தாழிக்குள்ளே எண்ணெய், எண்ணெய்க்குள்ளே கொடி, கொடிக்கு மேலே பூ. அது என்ன?
குத்து விளக்கு
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!


பாகற்காய்

🌽 கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய் வெப்பப்பிரதேச காயாகும்.

🌽 பாகற்காயானது கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும்.

🌽 இதன் சுவை கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்களை அடங்கியுள்ளது.

🌽 முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர்.

🌽 பாகற்காய் முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும்.

🌽  பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும்

இன்றையகதை

உதவி

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் சில சீடர்களை வைத்து, நல்ல புத்திகள், பண்புகள் சொல்லிக் கொடுப்பார். அப்போது அவர் சொன்னார், நாம் எப்பொழுதுமே அடுத்தவருக்கு உதவ வேண்டும், அடுத்தவருக்கு உதவுவதில் பின்நிற்கக் கூடாது, பெண்களைத் தாயாக, சகோதரியாக மதிக்க வேண்டும். இப்படியெல்லாம் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். சீடர்களும் அதைப் பின்பற்றி நடந்தார்கள்.

ஒருநாள் ஒரு சீடனோடு துறவி, ஒரு கடற்கரை வழியே நடந்து கொண்டிருந்தார. அப்போது அக் கடலிலே ஒரு பெண் தவறி விழுந்துவிட்டார், அப்பெண், கைகளை மேலே உயர்த்தி உதவி உதவி எனக் கத்தினார், இதைப் பார்த்த துறவி, சிறிதும் சலனமில்லாமல் நடந்துகொண்டே இருந்தார். இதைப் பார்த்த சீடன் சிறிதும் தாமதிக்காமல், துறவியிடமும் எதுவும் சொல்லாமல், கடலிலே குதித்து, அப்பெண்ணைத் தோளிலே தூக்கி வந்து கரையிலே போட்டான், பின்னர் எதுவுமே நடவாததுபோல், துறவியோடு நடந்து வந்தான். நீண்ட தூரம் நடந்தார்கள், இருவரும் எதுவும் பேசவில்லை.

பின்னர் துறவி சொன்னார், என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கி வந்தது தப்பு என்றார். இதைக் கேட்ட சீடன் சொன்னான், சுவாமி நீங்கள்தானே ஆபத்தில் உதவ வேண்டும் எனச் சொல்லித் தந்திருக்கிறீங்கள், அதுவும் நான் அப்பெண்ணைத் தூக்கிவந்து கரையிலே இறக்கியதோடு சரி, அதை நான் அப்பொழுதே மறந்துவிட்டேன். நீங்கள்தான் அதை இப்பவும் தூக்கிக்கொண்டு வருகிறீர்கள் என்றான். இதைக் கேட்ட துறவி வெட்கத்தில் தலை குனிந்தார்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.


🔮போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் நாளை மறுநாள் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

🔮இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு.

🔮தீபாவளி நெருங்குவதையொட்டி சீன பட்டாசு குறித்து மத்திய அரசு எச்சரிக்கை.

🔮தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

🔮10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு.


🔮உலக ராணுவ போட்டிகள் 2019ல் பங்கேற்ற மாற்றுத்திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார்.

HEADLINES
🔮 Modi has an ‘excellent’ meeting with Nobel laureate Abhijit Banerjee.

🔮Justin Trudeau wins Canada elections, but loses majority.

🔮Chennai Corporation plans Rs 42 crore facelift of city's subways, flyovers.

🔮New rules to regulate social media will be finalised by Jan 15: Centre to SC.


🔮Several parts of Chennai receive moderate to heavy rainfall.

No comments:

Post a Comment