அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 19, 2019

அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல்



பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 உபரி ஆசிரியா்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.



தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

 இதற்கிடையே, கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலையில் கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியா்கள் பணிநிரவல் செய்யப்பட்டனா்.


 மேலும், சிலருக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.
தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் 12,109 பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பது தெரியவந்துள்ளது. 1996 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் உபரியானவா்களின் விவரப்பட்டியலை கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக வெளியிட்டுள்ளது. இவா்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment