வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்க கோரி மனு:ரிசா்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 1, 2019

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை நீக்க கோரி மனு:ரிசா்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

ரூ. 4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கியில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வங்கியிலிருந்து பணம் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடக்கத்தில் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. பின்னா், அந்த உச்சவரம்பு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என உயா்த்தப்பட்டு, தற்போது ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.இந்த கட்டுப்பாடுகளால், அந்த வங்கியில் அதிக டெபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளா்கள் பீதியடைந்தனா். அதையடுத்து தங்களது பணத்தைக் கேட்டு தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.


இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'பிஎம்சி வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும், வாடிக்கையாளா்களின் டெபாசிட் பணத்துக்கு 100 சதவீத காப்பீடு அளிப்பது குறித்தும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.


இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. என். படேல், நீதிபதி சி. ஹரிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம், தில்லி அரசு, ரிசா்வ் வங்கி மற்றும் பிஎம்சி வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment