புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இதனை வாங்க மறுப்பது குற்றம் என வங்கி அதிகாரி விளக்கமளித்துள்ளார். சமீபகாலமாக தென்மாவட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை சிலர் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஏழைகள், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. துவக்கத்தில் நடுவில் ‘ரூ’ என்ற எழுத்தின்றி, 10 மட்டும் இருந்து, 15 கோடுகள் இடம் பெற்றுள்ள நாணயத்தை வாங்க மறுத்தனர்.
அதேநேரம், அப்போது 10 ரூபாய் நாணயத்தின் நடுவில் ரூ.10 என எழுத்துடன் பக்கவாட்டில் 11 கோடுகள் இடம்பெற்ற நாணயங்களை பார்த்து வாங்கினர். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லாது போன்ற புரளி காட்டுத்தீயாக பரவி, தற்போது இந்த நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
சிலரால் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிளப்பி விடப்பட்ட வதந்தி, தற்போது உச்சம் தொட்டிருக்கிறது.
வீடுகளில் குழந்தைகள் துவங்கி, பெரியவர்கள் வரை உண்டியல்களில் சேகரித்த 10 ரூபாய் நாணயங்களை, சிரமத்தோடு செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறும்போது, ‘‘சில இடங்களில் பஸ்கள், கடைகள், மார்க்கெட்டுகளில் மட்டுமல்லாது, ஆவின் பூத்களிலும் கூட வாங்க மறுக்கின்றனர். டெப்போவில் வாங்க மறுப்பதால், பயணிகளிடம் கண்டக்டர் வாங்க மறுக்கின்றனர்.
மத்திய அரசின் போஸ்ட் ஆபீசிலும் கூட தற்போது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வங்கிகளிலும் பணம் செல்லாது எனச் சொல்லாமல், சில்லரைகளை எண்ண முடியாது எனக்கூறி திருப்பித் தருகின்றனர். மின்வாரியம், வரிவசூல் மையங்கள் எங்கும் வாங்க மறுக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பிற்கு புழக்கத்தில் உள்ள இந்த 10 ரூபாய் நாணயங்களை காரணமின்றி புரளி பரப்பி முடக்கி வருவது வேதனையளிக்கிறது’’ என்றனர்.
வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாததாகவோ, வாங்க மறுப்பதோ குற்றம். 7.71 கிராம் எடை கொண்ட புதிய பத்து ரூபாய் நாணயம் குறிப்பிட்ட சதவீதங்களில் செம்பு, அலுமினியம், நிக்கல் கலந்துள்ளது. 1906ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லத்தக்கது. கிழிந்த மற்றும் 51 சதவீதத்திற்கும் அதிக பாதிப்புடைய ரூபாய் தாள்களை வங்கிகள் பெற்றுக்கொண்டு, வேறு ரூபாயை தருகிறது.
இது நாணயங்களுக்கும் பொருந்தும். சேதமடைந்த நாணயம், பணத்தையே திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலையில், நல்ல நிலையில் உள்ள ஒரு நாணயம் எப்படி செல்லாததாக இருக்கும். இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது. 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உ.பி. நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்க மறுப்பது மிகப்பெரிய குற்றம்’’ என்றார்.
2010ம் ஆண்டில்தான் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. அதன்பின், தலைவர்களின் நினைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நாணயம் அச்சடிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த நாணயங்களை, அந்நிறுவனமே அறிவிக்காத நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டியதில்லை.
மேலும், இந்த நாணயம் செல்லும் என்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை ஆகியவை எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களை வங்கிகள் நோட்டீஸ் மூலம் அளித்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த நடவடிக்கைகளில் எந்த வங்கியும் ஈடுபடவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவை, ‘விழிப்புணர்வு’
1861ம் ஆண்டு காகித நாணய சட்டத்திற்குப்பிறகே இந்திய ஆங்கிலேய அரசானது காகித பணம் அச்சிடுவதற்கு ஏகபோக உரிமை கொண்டது. அதுவரை நாணயங்களே அச்சிடப்பட்டன. பின்னாளில் ரிசர்வ் வங்கி இவ்வுரிமையை ஏற்றது.
அணா காலத்தைத்தொடர்ந்து, ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 20 பைசா, 25 பைசா வரிசையில் சமீபத்தில் 50 காசு வரை செல்லாத நாணயங்களாகி இருக்கிறது. இதில் ஐம்பது பைசா செல்லாது என எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், மக்கள் இதைச் செல்லாக்காசாக்கி விட்டதைப்போல, இந்த 10 ரூபாய் நாணயங்களையும் ‘புரளி’ பரப்பி செல்லாக்காசு ஆக்குவதற்கு முன்பு, அரசு இதன்பேரில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

No comments:
Post a Comment