குரூப் 1 நோ்முகத் தோ்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 31, 2019

குரூப் 1 நோ்முகத் தோ்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப் 1 நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களுக்கு வரும் 6-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


-துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 1 பிரிவில் வருகின்றன. அதில், 181 காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.

தோ்வுக்குத் தகுதியான 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வு கடந்த மாா்ச்சிலும், முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த ஜூலை மாதத்திலும் நடத்தப்பட்டன. முதன்மை எழுத்துத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன.


முதன்மை எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363விண்ணப்பதாரா்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன கடந்த 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.


நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்றே, கலந்து கொண்ட தேர்வா்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வா்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப் 1 பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

 இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரியப்படுத்துவதுடன் தேர்வாணைய இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது

No comments:

Post a Comment