இனி உங்க அனுமதியில்லாம உங்க வாட்ஸ் அப்பை யாராலும் பார்க்க முடியாது! ஈஸியான வழிமுறைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 31, 2019

இனி உங்க அனுமதியில்லாம உங்க வாட்ஸ் அப்பை யாராலும் பார்க்க முடியாது! ஈஸியான வழிமுறைகள்

பயனாளர்களின் தனிப்பாதுகாப்பு கருதி, விரல் ரேகை பதிவை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


ஆண்ட்டிராய்ட் செல்போன்களில் இயல்பாகவே,Screen Lock செய்யும் வசதி உண்டு.


ஆனால், அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி இருப்பதில்லை. இதனால், வாட்ஸ் அப்பில், நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை, நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கே தெரியாமல் எடுத்து படிப்பதுண்டு.


இத்தகைய சூழலில், வாட்ஸ் அப் செயலிக்கு என பிரத்யேகமான விரல் ரேகை பதிவு அறிமுகம் ஆகவுள்ளது. இந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர்.இந்தச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் புதிய வெர்சனை டவுன் லோட் செய்தல் அவசியம்.



அதைத் தொடர்ந்து Settings -> Account -> Privacy -> Fingerprint Lock -> Unlock with fingerprint என்ற வழிமுறைகளை பின்பற்றினால் நாம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும். இதன் பின் உங்களைத் தவிர யாரும் திறக்க இயலாது

No comments:

Post a Comment