உஷார்!! 2020ல் தேதியை முழுசா தான் எழுதணும்! ஏன் தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 27, 2019

உஷார்!! 2020ல் தேதியை முழுசா தான் எழுதணும்! ஏன் தெரியுமா?

இன்னும் சில தினங்களில் 2019ம் வருடம் நம்மிடமிருந்து விடைப்பெற்று செல்ல இருக்கிறது


. புது வருஷத்தை உற்சாகத்தோடு வரவேற்க நம்மில் பலரும் ஆவலாக இருக்கிறோம். ஆனா ஒரு முக்கியமான விஷயத்தை இந்த புது வருஷத்துல ஞாபகத்துல வெச்சுக்கோங்க.


பழக்க தோஷத்துல வர்ற 2020ம் ஆண்டு புது வருஷத்துல தேதியை எழுதும் போது 1.1.20 என்று எழுதாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க.

அப்படி நீங்க எப்பவும் போல 1.1.20ன்னு வருஷம் முழுக்க தேதியை பழையபடியே சோம்பேறித்தனத்தோட எழுதுனீங்கன்னா.. அதன் பிறகு அதை ரொம்ப ஈஸியா யார் வேணும்னாலும் திருத்திக் கொள்ளலாம்.


அதனால் தான் வரவிருக்கும் 2020ம் ஆண்டில் ஒரு தேதியை எழுதும் போது, ​​அதை அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை என்கிறோம். உதாரணத்துக்கு 01/01/2020 மற்றும் 31/01/20. இதில் நிச்சயமா 31/01/20 என்று எழுதக் கூடாது.


 ஏனெனில், அப்படி எழுதுனா யார் வேணும்னாலும் அதை சுலபமாக 31/01/2000 என்றோ அல்லது 31/01/2019 என்றோ அல்லது அவங்களோட வசதிக்காக அதை எந்த வருஷத்துக்கு வேணும்னாலும் மாற்றலாம். கடைசி இரண்டு இலக்கங்களை சேர்ப்பதன் மூலம் அப்படி சுலபமா மாற்ற முடியும்.


இந்த 2020 ஆண்டு மட்டுமே இந்த சிக்கல் நீடிக்கும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஆவணங்களையும் பெறும் போதும் ஆண்டினை 2020 என எழுதவும்.

No comments:

Post a Comment