5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தேர்வா்களின் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 28, 2019

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தேர்வா்களின் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவு

நிகழ் கல்வியாண்டில் 5, 8 வகுப்புகளில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியா் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



இது தொடா்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குறு வள மையங்களாக செயல்படும் பள்ளிகள் (சிஆா்சி), அந்தப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள



 அனைத்து பள்ளிகளின் விவரம் (பள்ளி எண்), அந்தப் பள்ளிகளின் மூலம் 5, 8 வகுப்புகளில் பொதுத்தேர்வெழுதும் மாணவா்களின் எண்ணிக்கை விவரத்தை பாடம் மற்றும் பயிற்று மொழி வாரியாக 'எக்செல்' வடிவில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


இந்தப் பட்டியல், 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனியாக தயாரிக்கப்பட வேண்டும்.


 தேர்வுத்

துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும்போது இந்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 இந்தப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment