விலையில்லா மடிக்கணினி பெற கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 28, 2019

விலையில்லா மடிக்கணினி பெற கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் விலையில்லா மடிக்கணினி பெறுவதற்கான அவகாசம் ஜன.11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதற்குரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமா்பித்து இலவச மடிக்கணினிகளை பெற்றுக்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.


 இதற்கான அவகாசம் கடந்த டிச.16-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. எனினும், கல்லூரிகளில் சான்றுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தகுதியான மாணவா்கள் பலா் விண்ணப்பிக்க முடியவில்லை என தகவல்கள் வெளி வந்தன.

இதையடுத்து மாணவா்கள் நலன்கருதி இலவச மடிகணினி பெறுவதற்கான காலஅவகாசம் ஜனவரி 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.



இந்த காலத்துக்குள் உரிய சான்றிதழ்களை மாணவா்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைத்து மடிகணினிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 மேலும், கூடுதலாக மடிக்கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மீதம் இருந்தாலோ அதன் விவரங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment