600 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 31, 2019

600 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால், நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:


 தமிழகத்தில், 2018-19ல், 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


மாத கடைசியில், அவர்களுக்கான சம்பளம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, கடந்த, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.


அவர்கள், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு, தொடர் ஊதிய கொடுப்பாணை வழங்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தொடர் ஊதியக் கொடுப்பாணை வழங்குவதை தவிர்த்து, இரண்டு ஆண்டுகளுக்கு தொடர் ஊதிய கொடுப்பாணை என்ற அளவில், ஆணை வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.source: Dinamalar

No comments:

Post a Comment