நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 30, 2019

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.


தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் தேர்வு நடந்து வருகிறது.


 இதனால் கிராமப்புற மாணவர்கள், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்டரில் நீட் பயிற்சி பெற முடியாத மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது.


இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.



இதற்கு விண்ணப்பித்தல் டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தல் கையேட்டை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1,500 பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர்/ ஒபிசி நான் கிரிமிலேயர் மாணவர்களுக்கு ₹1,400 எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மார்ச் 27ம் தேதி மாணவர்கள் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். 2020 நீட் தேர்வு எழுதுவதற்காக 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment