தமிழகத்தில் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து வாக்குகளை என்னும் பணியானது வரும் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்
அதில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 அன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும்
பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment