ஓர் ஆண்டில் நாம் மொபைல் போனில் செலவழிக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா?நண்பர்களே! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

ஓர் ஆண்டில் நாம் மொபைல் போனில் செலவழிக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா?நண்பர்களே!

இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் தான் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை மொபைல் போனில் செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் தற்போது மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. ஸ்மார்ட் போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற அளவுக்கு மொபைல் போதைக்கு அடிமையானவர்கள் பலர். அந்த வகையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வில், சராசரி இந்தியர் தனது விழித்திருக்கும் நேரத்தின் மூன்றில் ஒரு பகுதியை மொபைல் போனுடன் செலவிடுகிறார். அதாவது, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,800 மணி நேரம் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.

இது அவர்களின் உடல்நலத்தை பெருமளவு பாதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 50%க்கும் மேற்பட்டோர் மொபைல் போன் இல்லாமல் வாழ முடியாது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மொபைல் போன்களில் உரையாடுவதை விரும்புகிறார்கள் என்று சைபர்மீடியா ரிசர்ச் (Cybermedia Research ) தெரிவித்துள்ளது.



ஸ்மார்ட்போன் போதை பழக்கத்தின் விளைவாக, 30%க்கும் குறைவான மக்களே தனக்கு அன்பானவர்களை மாதத்திற்கு பலமுறை சந்திக்கிறார்கள். மேலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் மூன்று பேரில் ஒருவர் தங்கள் மொபைல் போன்களை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்றும் ஐந்து பேரில் மூன்று பேர், வாழ்க்கையில் மொபைல் போன் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என்று தெரிவித்தனர்.


ஆய்வில் 75 சதவீதம் பேர் தங்கள் பதின்பருவத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதை ஒப்புக் கொண்டதாகவும், அவர்களில் 41 சதவீதம் பேர் உயர்நிலைப் பட்டம் பெறுவதற்கு முன்பே ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி விட்டதாகவும் கூறியுள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் சமூகத்தில் ஒரு அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. உறவுகள், தொடர்புகள் மற்றும் மனித உணர்வுகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகியவற்றால் மாற்றம் ஏற்படுகிறது என்று விவோ நிறுவனத்தின் இயக்குனர் நிபூன் மரியா கூறினார். நாட்டில் 8 நகரங்களில் நேரடியாகவும், ஆன்லைனிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2000 பேர் கலந்துகொண்டதில், 36 சதவீதம் பெண்கள் மற்றும் 64 சதவீதம் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment