தமிழகம் முழுக்க, அரையாண்டு தேர்வு பள்ளிகளில் நடக்கிறது. ஆறு, எட்டு, பத்தாம் வகுப்புகளுக்கு காலையிலும், மற்ற வகுப்புகளுக்கு மதிய வேளையிலும் தேர்வு நடக்கிறது. காலையில் தேர்வு எழுதி விட்டு, மாணவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்
. அடுத்த தேர்வுக்கு தயாராகாமல், சீருடையில் பொது இடங்களில் மாணவர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.பொதுத்தேர்விலும் மாநகராட்சி பள்ளிகளால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் பின்னுக்கு செல்வதாக, புகார் உள்ளது. எனவே நடப்பாண்டில், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், தேர்வு முடிந்தவுடன், சிறப்பு வகுப்பு நடத்தி, அடுத்த தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டுமென கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment