நாகரிக வளர்ச்சியால், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளுக்கு, புத்துயிர் கொடுத்து வருகிறது,
கிழக்கு தாம்பரத்தில் உள்ள தமிழ்க்கலை ஆராய்ச்சி மையம்.தமிழ் சமூகம், உலக அளவில் உச்சத்தை தொடுவதற்கு, தமிழரின் கலைகள் ஆணி வேராக இருந்தன. வாழ்வியலின் ஒவ்வொரு நிலையிலும், கலை இடம் பெறுகிறது.
இதன் வாயிலாக, தம்மையும், தம்மைச் சார்ந்தவரையும், தாம் வணங்கும் தெய்வத்தையும் மகிழ்ச்சிப்படுத்த, தமிழர்கள் கலைகளை பயன்படுத்தினர்.இவ்வாறாக வாழ்வியலுக்கும், வழிபாட்டிற்கும் வழிகாட்டிய நாட்டுப்புற கலைகள், இன்று மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கு, இளம் தலைமுறையினர் வாயிலாக, புத்துயிர் கொடுக்கும் வகையில், தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள, தமிழ்ப் பாரம்பரிய தற்காப்பு கலை, கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகின்றன.அதன் இயக்குனரும், வர்மக்கலை ஆசானுமான ரமேஷ், 35, கூறியதாவது
:பாரம்பரிய கலைகளின் அழிவிற்கு முக்கிய காரணம், இளைய தலைமுறையினருக்கு, அவற்றின் முக்கியத்துவம் எடுத்துச் செல்லப்படாதது தான்.
இதற்காகவே, பள்ளி மாணவர்களிடம் இருந்து, கலைகளை கற்றுத் தர துவக்கினேன்.
தற்போது, சிலம்பம், குத்துவரிசை, மல்யுத்தம், களரி, வர்மக்கலை ஆகியவை கற்றுத் தரப்படுகிறது. எதிர் காலத்தில், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், ராஜாராணி ஆட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவற்றை கற்றுத் தர முடிவு செய்துள்ளேன்.கட்டணத்தை பொறுத்தவரையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
எங்கள் மாணவர்கள், சிலம்பத்தில் மண்டல போட்டிகளில், ஐந்து முறையும், தேசிய போட்டிகளில், ஒரு முறையும், மாநில போட்டிகளில், மூன்று முறையும் தங்கம் வென்றுள்ளனர்
.மூத்த சித்தடாக்டர்கள் வாயிலாக, இயற்கை மருத்துவ முறைகளான, 'பஞ்சபட்சி' நுால்வழி நோய் கணிப்பு வகுப்புகள், 'வர்மசாஸ்திர' நுால்வழி நோய் தீர்வு வகுப்புகளும் நடத்துகிறோம்.
இதில், நோய்களுக்கான மருந்து செய்முறை பயிற்சி, 'உணவே மருந்து; மருந்தே உணவு' எனும், சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாட்டிற்குட்பட்ட மருத்துவ பயிற்சிகள், மூலிகை நேர்காணல், முதியோர்களுக்கு யோகா, தியானப் பயிற்சிகளும் அளித்து வருகிறோம்.
இந்த வகுப்புகளில், சித்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 'வர்மசாஸ்திர' நுால்வழி நோய் தீர்வு வகுப்புகளில், தமிழ் கலைகள் மீது ஆர்வமுள்ளவர்கள், வர்மக் கலை பயிலும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவை, இலவசமாக நடத்தப்படுகின்றன
.இதைத்தவிர, தமிழகம் முழுவதும், ஏழை மாணவர்கள் வசதிக்காக, யார் கோரிக்கை வைத்தாலும், அந்த பகுதி கிராமங்களுக்கு, என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை அனுப்பி, இலவசமாக கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறேன்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், எந்த மாவட்டத்தில் இருந்து வேண்டுமானாலும் என்னை, 97102- 55664, 98842 -33877 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.குறைந்தபட்சம், 10 மாணவர்கள் இருந்தாலே போதும். அனைவருக்கும் இலவசமாக கலைகள் கற்றுத் தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கால மாற்றம், நவீன உலகம், சினிமாவின் தாக்கம், தொலைக்காட்சிகளின் வரவு போன்றவற்றால், தமிழ்ப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காத்த நாட்டுப்புற கலைகள், இன்று இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன.அவற்றை, கட்டிக் காக்கும் ரமேஷ் போன்றவர்களை பின்பற்றினாலே, நம் அடுத்த தலைமுறைக்கு, அவற்றின் அழகையும், ஆழத்தையும் கொண்டு சேர்க்கலாம்.

No comments:
Post a Comment