பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 28, 2019

பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



மொத்தம் 926 உதவியாளர் பணியிடங்களுக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.14,650/- கொடுக்கப்படும்.



 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.rbi.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF பார்த்து தெரிந்துக் கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2020

No comments:

Post a Comment