குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய மந்திரம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 28, 2019

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய மந்திரம்!

பெரும்பாலான பெற்றோர்களின் தீராத ஆசையாக இருப்பது குழந்தைகளின் கல்வி பற்றிய சிந்தனைகளாக தான் இருக்கிறது



. பல குடும்பங்களிலும் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர் குழந்தைகளுக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாலும் காலையில் பள்ளிக்கு கிளம்பவே நேரம் சரியாக இருப்பதால் பல குழந்தைகள் மந்திரம் ஜெபிக்க முடியாமல் போகிறது.



பெற்றோராகிய நாமும் குழந்தைகளுடன் இருந்து காலைப் பொழுதில் மந்திரங்களை ஜெபம் செய்யலாம் என்றால் பெற்றோர்களுக்கு காலையில் குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கு அனுப்பவே நேரம் சரியாக இருப்பதால் இருவரும் ஒன்றாக இருந்து ஜெபிக்க வாய்ப்பு அமைவதில்லை.


எனவே குழந்தைகளுக்காக முடிந்த நேரத்தில் பெற்றோர் மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்ளலாமா என்ற கேள்விக்குப் பதிலாக இந்த மந்திரத்தை நியூஸ் டிஎம் வாசகர்களுக்காக பதிவிட்டிருக்கிறேன்.



இந்த மந்திரத்தை அதிகாலையில் ஜெபிப்பது சிறப்பு. இல்லையென்றால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது ஜெபியுங்கள். ஆனால் குரு மற்றும் புதன் ஹோரையில் ஜெபிப்பது நிறைவான பலனை தரும்.


ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்
வளர்பிறை புதன்கிழமை அன்று தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும். கிழக்கு பார்த்து அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.


என் மகன் / மகள் ( உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும். வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்க வேண்டும்.

தகவல்: Newstm

1 comment:

  1. NEWSTM க்கு நன்றி... அதேபோல. கிறிஸ்தவர்களும்,முஸ்லீம்களும்,பௌத்தர்களும்,சீக்கியர்களும்...பிள்ளைகள் கல்வியில் சிறக்க மந்திரங்களாகிய வசனங்களை ஜெபிக்க கற்றுக் கொடுங்கள் ஐயா...

    ReplyDelete