புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 25, 2019

புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிளான் 1999 சந்தாதாரர்களுக்கு பி.எஸ்.என்.எல் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.


 இதுகுறித்து பி.எஸ்.என்.எல் இயக்குனர் ஷித்ல பிரசாத் (சி.எம்) வெளியிட்ட அறிக்கை:


 பி.எஸ்.என்.எல் பிளான் 1999 சந்தாதாரர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு, கவர்ச்சிகரமான சலுகையாக 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன், அளவில்லா அழைப்புகள் அனைத்து நெட் ஒர்க்கிற்கும், தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் 365 நாட்களுக்கு பதிலாக 425 நாட்களுக்கு வழங்குகிறது.


மேலும், சில சிறப்பு அம்சங்களாக பிளான் 1999ல் பிஎஸ்என்எல் டியூன் மற்றும் பி.எஸ்.என்.எல் டிவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இச்சலுகை இன்று முதல் 31.1.20 வரை அமலில் இருக்கும்.


இதை தவிர கூடுதல் டாக் டைம் சலுகையாக ரூ.250 ரீசார்ஜுக்கு ரூ.275ம், ரூ.450 ரீசார்ஜுக்கு ரூ.500 என கவர்ச்சிகரமான சலுகைகள் நேற்று முதல் 2.1.2020 வரை கிடைக்கும்.


மேலும், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ரூ.97 மதிப்புள்ள சிறப்பு கட்டண வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது.


 அனைத்து நெட்ஒர்க்கிலும் அளவற்ற அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் பி.எஸ்.என்.எல் டிவி சந்தா ஆகிய சிறப்பு அம்சங்கள் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வவுச்சர் கிடைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment