பொதுத் தேர்வை பயமின்றி சந்திக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்
. அதனால் அனைத்து பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை சீர் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பதற்றமாக காணப்படுவது வழக்கம்.
அதனால், அவர்கள் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகிறது. மாணவர்கள் இடையே உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடக்க இருப்பதை அடுத்து, பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைத்து மாநில கல்வித்துறைக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், மீண்டும் அந்த துறை கடிதம் அனுப்பி மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அதனால் பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் ‘‘பரீட்சா பே சர்ச்சா 2020’’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பள்ளி மாணவர்களுடன் ஜனவரி 16ம் தேதி டெல்லியில் உள்ள தல்காதோரா ஸ்டேடியத்தில் உரையாற்றுகிறார்.
இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதன் பேரில் பள்ளி மாணவர்கள் இணைய தள வழியாக கட்டுரைகள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் உரையாற்ற உள்ள நிகழ்ச்சியை தூர்தர்ஷன், வானொலி மூலம் நேரடியாக ஒலி ஒளி பரப்ப உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை நேரலை தளங்களான மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை Youtube channel of MHRD Mygov.in, Face Book Live and Swayamprapa Channels of MHRD மூலமும் பிரதமர் அலுவலக இணைய தளம் ஆகியவற்றில் பார்க்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். பழுதாகியுள்ள தொலைக்காட்சி பெட்டிகளையும் பழுது நீக்கி வைக்க வேண்டும்.
ேமலும் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
பொங்கல் லீவு போச்சா..
இந்த நிகழ்ச்சி நிரல்படி தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி பொங்கல் பண்டிகை. அதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்க மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment