அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 24, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து

உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 11ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தன. இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறை நாட்களில் அரசுப் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தவிர, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியருக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது.

 அதற்கான அட்டவணையில் ஏற்கெனவே வெளியானது. இதற்காக 412 நீட் பயிற்சி மையங்கள் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில், தமிழகத்தில்  உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடக்கிறது

அதற்கான வாக்குச் சாவடிகள் அரசுப் பள்ளிகளில்தான் அமைக்கப்பட உள்ளன. வாக்குச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல இருப்பதால், நீட் பயிற்சிக்கான வகுப்புகள் திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாமதமாக நீட் பயிற்சி தொடங்கிதால், மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. அதேபோல இந்த ஆண்டு தாமதமாக பயிற்சி தொடங்கினால் இந்த  ஆண்டும் மாணவர்கள் கணிசமாக தேர்ச்சி பெறுவது கடினம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 28ம் தேதி நடத்த வேண்டிய நீட் பயிற்சி வகுப்பு ஜனவரி 4ம் தேதி நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment