செல்வமகள் சேமிப்பு திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 24, 2019

செல்வமகள் சேமிப்பு திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு

செல்வமகள் சேமிப்பு திட்ட ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளிகளில், 'பெண்சக்தி' எனும் தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது



.தபால் துறை, &'சுகன்யா சம்ரிதி&' எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை, 2015ல் துவக்கியது.

இதில், பிறந்த குழந்தை முதல், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில்,அவர்களது பெற்றோரோ, பாதுகாவலரோ, 250 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கை துவக்கலாம்.


இந்தாண்டு நவ., வரை, நாடு முழுவதும், 1.56 கோடி செல்வமகள் சேமிப்பு கணக்குகள் துவக்கப் பட்டுள்ளன.


தமிழகத்தில், 7 லட்சத்து, 93 ஆயிரத்து, 965 கணக்குகள் துவங்கப் பட்டுள்ளன.இந்த திட்டத்தில், பள்ளி மாணவியரை, 100 சதவீதம் இணைக்கும் முயற்சிகளில், தபால் துறை ஈடுபட்டுள்ளது.


ஜன., 21ல், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, &'பெண்சக்தி&' எனும் விழிப்புணர்வு முகாமை, பள்ளிகளில் நடத்த தபால் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment