கல்விக்கான அர்ப்பணிப்பில் உச்சம் தொட்ட ஆசிரியர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 25, 2019

கல்விக்கான அர்ப்பணிப்பில் உச்சம் தொட்ட ஆசிரியர்கள்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அமைந்துள்ளது வெ.குட்டப்பாளையம் கிராமம். இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது.


 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற இந்த பள்ளியில் தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 13 ஆக குறைந்தது.


 இதையடுத்து செய்வதறியாது தவித்த ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் திலகவதியும், உதவி ஆசிரியர் ராமசாமியும் இணைந்து சுற்றுவட்டார கிராமங்களில் மாணவர்களை வீட்டுக்கே சென்று வாகனங்களில் அழைத்துவர முயற்சி மேற்கொண்டனர்.


வெ.குட்டபாளையத்தில் இருந்து 6 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு தினமும் வேன் ஒன்றை ஆசிரியர்கள் சேர்ந்து இயக்க செய்கிறார்கள்.


 இதற்காக தங்களது சொந்த பணத்தை செலவு செய்யும் அவர்கள் அரசு பள்ளியில் தரமான கல்வி பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார்.


 செலவு செய்து வேனுக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த வாகனத்தை காலையிலும் மாலையிலும் இயக்கி மாணவர்களை அழைத்து வருவது பத்திரமாக வீடு சேர்க்கும் பணியை உதவி ஆசிரியர் ராமசாமி தானே முன்வந்து செய்வது அர்பணிப்பின் உச்சம்.


ஆசிரியர்களின் சீறிய முயற்சியால் 13 ஆக சரிந்த வெ.குட்டப்பாளையம் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டு 25 ஆக உயர்ந்துள்ளது. தன்னமலற்ற ஆசிரியர்களின் சேவையை கண்டு பெற்றோர்கள் பூரிப்படைகிறார்கள்.


 பணி நேரத்தில் சொந்த வேலையையும், தொழிலையும், செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரை கண்ட தமிழகத்திற்கு கல்விக்காக அரும்பணியாற்றும் வெ.குட்டப்பாளையம் ஆசிரியர்கள் ஆச்சரியம் தான்.


இது போல அர்ப்பணிப்பு பள்ளிகள் தோறும் உருவாகுமானால் கல்வியில் தமிழகம் எப்போதோ தனியிடத்தில் இருக்கும் என்தில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment