டான்செட் நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் எம்இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவு தேர்வு எழுதவேண்டும்.
இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான டான்செட் அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஜனவரி 7 முதல் 31ம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் கட்டணமாக 300 செலுத்தினால் போதுமானது. பிற பிரிவு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் ₹600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதிகள் உட்பட இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் துறையின் +91-044-22358314 தொலைபேசி எண்ணிலும், directorentrance@gmail.com என்ற இ-மெயில் முகவரிலும் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.

No comments:
Post a Comment