மாணவர்களுக்கு, 'பிங்க்' புத்தக பை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

மாணவர்களுக்கு, 'பிங்க்' புத்தக பை

தமிழக அரசின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'பிங்க்' நிற, புத்தக பை வழங்கும் பணி துவங்கி உள்ளது.




தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகை நலத்திட்டங்கள் அமலில் உள்ளன. இலவச பாடப் புத்தகம், இலவச நோட்டு புத்தகம், கணித உபகரண பெட்டி, இலவச புத்தகப் பை, வரைபடம், 'கிரயான்ஸ்' எனப்படும் வண்ண பென்சில்கள், சைக்கிள், லேப்டாப் என, பல இலவசங்கள் வழங்கப் படுகின்றன.



இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள இலவச புத்தகப் பையை, நடப்பாண்டு மாணவர்களுக்கு வழங்கும் பணி துவங்கி உள்ளது. இந்தாண்டு, இரண்டு விதமான வண்ணங்களில் புத்தகப் பைகள் வழங்கப் படுகின்றன




. ஏற்கனவே, கறுப்பு நிறத்தில் புத்தக பை வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கருநீலம் மற்றும் பிங்க் நிற பைகள் வழங்கப் படுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, பிங்க் பையும், மற்ற மாணவர்களுக்கு கருநீல நிற பையும் வழங்கப் படுகின்றன. மாவட்ட வாரியாக பைகள் அனுப்பப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களால், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment