ஜெயசூர்யாவின் 22 ஆண்டு சாதனையை முறியடித்த 'ஹிட் மேன்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

ஜெயசூர்யாவின் 22 ஆண்டு சாதனையை முறியடித்த 'ஹிட் மேன்'

ஒரு ஆண்டில் 3 விதமான போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.




இந்தியா - விண்டீஸ் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் அசத்த, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை கைபற்றியது


. இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த போது, 2019ல் மூன்று விதமான (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்) போட்டியிலும் சேர்த்து 2,442 ரன்கள் குவித்தார். இந்த ஆண்டில், 10 சதங்கள் உட்பட, ஒருநாள் போட்டிகளில் 1,490 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 556 ரன்கள், 'டுவென்டி-20' போட்டிகளில் 396 ரன்கள் எடுத்துள்ளார்.



இதனையடுத்து ஒரு ஆண்டில் மூன்று விதமான போட்டியிலும், அதிக ரன் சேர்த்த துவக்க வீரர் என்ற சாதனை படைத்தார். 22 ஆண்டுகளுக்கு முன் 1997ம் ஆண்டில், இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 2387 ரன்கள் எடுத்ததே அதிகம். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ரோகித் சர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment