அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு CEO அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு CEO அறிவுரை

கள்ளக்குறிச்சியில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும் என சி.இ.ஓ., முனுசாமி அறிவுறுத்தினார்.


கூட்டத்திற்கு, விழுப்புரம் சி.இ.ஓ., முனுசாமி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார்

.கூட்டத்தில் ஆசிரியர்களின் வருகை பதிவேடுக்காக பொருத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் மிஷினில் புதிய மாற்றங்கள். 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி (அடல் டிங்கரிங் லேப்) குறித்தும், 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கான இணையதள வசதியுடன் கூடிய ைஹ டெக் கம்ப்யூட்டர் லேப். 6 முதல் 8 வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கிக்கூறப்பட்டது.

மேலும் அரையாண்டு தேர்வு முடிவுகளைக் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி பொதுத்தேர்வில் அதிக சதவீத தேர்ச்சியை பெற முயற்சி செய்ய வேண்டும், என சி.இ.ஓ., முனுசாமி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 120 பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment