SBI வெளியிட்ட அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 30, 2019

SBI வெளியிட்ட அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.


குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறைத்து வருகிறது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தனது ரெப்போ விகிதம் குறித்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஏற்கனவே இருந்த 8.05 சதவிகிதத்தில் இருந்து 0.25% குறைத்து 7.8 சதவிகிதமாக அறிவித்துள்ளது. மேலும், இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் வருகிற ஜனவரி 1ம் தேதியில் இருந்து குறையும்.


இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment