குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீனியாரிட்டியில் முன்னுரிமை: TNPSC வெளியிட்ட பட்டியலால் குழப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 25, 2019

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீனியாரிட்டியில் முன்னுரிமை: TNPSC வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

தமிழக பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளர் 98 பேருக்கு செயற்பொறியாளராக பதவி உயர்வில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  தமிழக பொதுப்பணித்துறையில் கடந்த 1998ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி 165 உதவி பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்தனர். அப்போது, நியமனத்தில் முதுநிலை பட்டியல் நிர்ணயம் செய்ததில் குளறுபடி ஏற்பட்டு தவறான முதுநிலை பட்டியல் வெளியிடப்பட்டது.


 அதாவது, ஒரே வகுப்பை சேர்ந்தவர்களில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை முன்னிலையிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பின்னால் வைத்தும் சீனியாரிட்டி வெளியிடப்பட்டது.



  இதையறிந்த பொறியாளர்கள் சிலர் 2006ம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் குளறுபடிகளை சரி செய்து வெளியிடக்கோரி தனி நீதிபதி அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கு நிராகரிக்கப்பட்டது.


இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது


. இந்த வழக்கில் அமர்வு நீதிமன்றம் கடந்த 31.3.2015ல் மனுதாரரர்களுக்கு, தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட குளறுபடியான முதுநிலை பட்டியல் தவறு என்றும், பட்டியல் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே திருத்தி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.


 இத்தீர்ப்பினை எதிர்த்து தேர்வாணையமும், முதுநிலை பட்டியலில் குறைவான மதிப்பெண் பெற்று முதுநிலை பட்டியலில் முன்னிலையில் உள்ள சிலரும் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016 ஜன.22ம் தேதியில் ஏற்கனவே உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பினை உறுதி செய்து உத்தரவிட்டது.



  இத்தீர்ப்பினை மறு பரிசீலினை செய்யும் படி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அது நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, அந்த வழக்கும் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் செயற்பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது


. இதில், அரசால் திருத்தி வெளியிடப்பட்ட முதுநிலை பட்டியலுக்கு பதிலாக, பழைய முதுநிலை பட்டியலின் அடிப்படையில், அதாவது குளறுபடியாக உள்ள முதுநிலை பட்டியலை கொண்டு அவசர, அவசரமாக முதல்வர் எடப்பாடி ஓப்புதலை பெற்று கடந்த நவம்பர் 27ம் தேதி 98 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.


 இதனால், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் செயற்பெறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது பொதுப்பணித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment