அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 13 உறுப்புக் கல்லூரிகள், 3 வளாக கல்லூரிகளில் 133 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிவிக்கையில் 10 விதமான பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக கூடுதல் பதிவாளர், உறுப்புக் கல்லூரிகள் மையம், அண்ணா பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்து தேர்வு, நேர்காணலுக்கு தகுதியானவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். ஆசிரியர் தேர்வு விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் முடிவே இறுதியானது. இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment