தமிழகத்து யோகா ஆசிரியர் உலக சாதனை:11 நாட்களில் 1,001 ஆசனங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

தமிழகத்து யோகா ஆசிரியர் உலக சாதனை:11 நாட்களில் 1,001 ஆசனங்கள்

கோவையில், 11 நாட்களில், யோகாசனத்தில், 1,001 ஆசனங்கள் செய்து, தனிநபர் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர், யோகா ஆசிரியர் குணசேகரன். 


இவர், யோகாசனத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கத்தில், 11 நாட்களில், 1,001 ஆசனங்களை, மற்றவர்கள் செய்யாத வகையில் செய்து, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கினார்.




நேற்று முன்தினம் வரை, 962 ஆசனங்களை செய்து முடித்தார்.இறுதி நாளான நேற்று, கோவை வைசியாள் வீதியில் உள்ள வாசவி அரங்கில், 39 ஆசனங்கள் செய்து, 1,001 ஆசனங்களை நிறைவு செய்து, யோகாவில் தனிநபர் உலக சாதனையை படைத்தார்.




யோகா ஆசிரியர் குணசேகரன் கூறியதாவது:நம் நாட்டின் பாரம்பரியமானது, யோக கலை. இன்றைக்கு, உலகம் முழுவதும், இந்த கலை வளர்ந்து வருகிறது. நான், பல ஆயிரம் பேருக்கு, இந்த கலையை கற்றுக்கொடுத்து இருக்கிறேன்.'எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியா ரெக்கார்ட்ஸ் அகடாமி' ஆகிய நிறுவனங்கள், இந்த சாதனைக்கு சான்று அளித்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment